சனி, நவம்பர் 05, 2011

கடவுளின் கொ.ப.செ

அதன் பெயர் என்ன?
என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்


அது என்னிடம் இருக்கிறதா?
அது எல்லாரிடமும் இருக்கிறது

அது எங்கே இருக்கிறது?
அதற்குள் தான் நீ இருக்கிறாய்


அது இன்பமானதா? துன்பமானதா?
இரண்டும் இல்லாத இன்னொன்று


அதை நான் வெறுக்கிறேன்
அதனால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை


அதை நான் வணங்குகிறேன்
அதனால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை


அது அதிசயங்கள் செய்து காட்டுமா?
அதுவே ஒரு அதிசயம்தான்


அது ஏன் உருவமெடுத்து வந்து காட்சி தருவதில்லை?
அதுவே எல்லா உருவங்களுமாக இருப்பதால் தனியே காட்சி தருவது
சாத்தியமில்லாதது


அது எத்தனை வகைப்படுகிறது?
அது முழுமையானது


அதனை தொழுதால் வேண்டுவது கிடைக்குமா?
அதனால் உனக்கு எந்த பயனும் கிடைக்காது


அதற்கு பூஜைகள் செய்தால் குறைகள் நிவர்த்தியாகுமா?
அதனிடம் வியாபாரம் செய்ய முடியாது


அது எப்படிபட்டது?
அது அழகானது


அதை பார்க்க முடியுமா?
உணர முடியும்


அதை எப்படி உணருவது?
அதை நீதான் கண்டுபிடிக்க வேண்டும்


அதை கண்டுபிடிக்க முடியவில்லை
முயற்சி செய்...


அதை கண்டுபிடிக்க முடியாது
முயற்சி செய்...


அதை மதங்கள் வழியாக - கோட்பாடுகள் வழியாக - வழிபாட்டு முறைகள் வழியாக - சடங்குகள் வழியாக - பூஜைகள் வழியாக...
நிறுத்து - உணருவதற்கு வழிகள் என்பது இல்லை... உனக்கு அது கிடைக்காது


அப்படியானால் அதை உணருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
எதுவும் செய்யாதே


இன்னுமொரு சந்தேகம் -
அது எப்போது தெரியும்?
கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டால் அப்போது தெரியும்...

1 கருத்து:

  1. J கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம் பக்கம் பக்கமாக படித்தவைகளை உங்களின் ஒரு கவிதையில் உணர முடிகிறது..

    பதிலளிநீக்கு