இயக்கம்

நான் எழுதி இயக்கிய ஏழு குறும்படங்களின் காணொளி


பைத்தியம்

இயற்கை அசாத்தியமான ஒழுங்குமுறையுடன் இயங்குகிறது. இயற்கையின் ஒரு பகுதியான நாமும் அதே ஒழுங்குமுறையுடன் தான் இயங்குகிறோம். இயங்க வேண்டும் என்பதே விதி. இயற்கைக்குள் இருக்கும் நமக்குள் நிகழும் எல்லா சம்பவங்களும் அந்த விதிப்படி தான் நடக்கின்றன. கண்ணுக்கு தெரியாத 'அதை' விதியின் விளையாட்டு என்று சொல்லலாம் அல்லது இயற்கையின் கணிதம் என்று சொல்லலாம்.

http://www.youtube.com/watch?v=D9NJllIZKgo



பிழை


வெளி உலகத்திலிருந்து நம்ம தனிமைப் படுத்திக் கொள்ள எழுப்பப்பட்டதே சுவர்கள். உலகத்துக்கு தெரியாத மனதின் ஒரு பகுதி அந்த சுவர்களுக்குள் தான் இருக்கிறது. அதுவே ஆடைக்குள் ஒளிந்திருக்கும் மனிதனின் உண்மை முகம்.

http://www.youtube.com/watch?v=8Y5Z7URmc34&feature=related


கரை


அரசியல் - சதுரங்கம். இந்த இரண்டிற்கு மட்டும் சரி என்பதும் இல்லை - தவறு என்பதும் இல்லை - சதுரங்கம் ஆடுவதற்கு இரண்டு பேர் போதும். ஒருவனுக்கு மற்றவன் எதிரியாக இருப்பது அவசியம். எதிரித் தன்மையே காய்களை இயங்க வைக்கிறது. காய்களின் உயிர்த் தியாகத்திலேயே வெற்றி விளைகிறது. ஆனால் அந்த வெற்றியை கொண்டாட காய்கள் உயிரோடு இருப்பதில்லை. முட்டாள் காய்கள்.

http://www.youtube.com/watch?v=OAl2uDxt-c8&feature=related


ரெண்டு சுழி 'ன'



மனிதர்கள் ஒன்று சேர்ந்து அடக்குமுறையை எதிர்த்து போராட - ஒரு தலைவனை உருவாக்கி கொண்டு அவன் பின்னால் ஆட்டு மந்தையை போல கோஷம் போட்டுக் கொண்டே செல்ல - காரணமே இல்லாமல் உயிர் தியாகம் செய்ய - ஆரம்ப காலத்திலிருந்தே அடக்கு முறை என்ற மாயை நமக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. அடக்கு முறை செய்தவர்களும் அடக்கு முறையை எதிர்க்க நம்மை தூண்டியவர்களும் நாளை தூண்ட போகிறவர்களும் இறுதி வரை நம்மை அடிமை படுத்தி கொண்டே இருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

http://www.youtube.com/watch?v=m-2tTy4OpfM&feature=related

நிகழ்தகவு


வாழ்க்கையில் சாத்தியக்கூறுகள் அதிகம். முடிவிலி என்று கூட சொல்லலாம். சாதியக்கூறுகளிலிருந்து முளைக்கும் வாழ்கையின் நிகழ்வுகளே வாழுதலைப் பற்றிய பாடத்தை கற்று கொடுக்கும்.

http://www.youtube.com/watch?v=77t82EUSqzw&feature=related

ஒரு ஊர்ல



பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்கு தானே மருந்து
-திருவள்ளுவர்
http://www.youtube.com/watch?v=GBq4fKviBK0&feature=related


தில்லுமுல்லு


காதல் ஏன் ரசிக்க வைக்கிறது என்றால் அது புதியதாக இருக்கிறது - புதியது ஏன் ரசிக்கப்படுகிறது என்றால் அது காதலால் உருவாக்கப்படுகிறது - காதல் மட்டுமே புதியது என்றால் என்ன என்பதை காட்ட வல்லது.


1 கருத்து: