சனி, நவம்பர் 05, 2011

பாடல்கள்

நான் எழுதிய ஒரு சில பாடல்களின் காணொளி

திரைப்படம் : சிவி
இசை : தரண்


http://www.youtube.com/watch?v=5irs_7Z1I28


திரைப்படம் : city of god
இசை : பிரஷாந்த் பிள்ளை

http://www.youtube.com/watch?v=5b5JQqFZ-CM


தொலைகாட்சி தொடர் : மகான்
இசை : இளையவன்

http://www.youtube.com/watch?v=wU7dAiztXD8&feature=related



பித்து மனம்

கவிதை கேட்டால்
கவிதையும் கொடுக்கும்...

அலை பாயும்
அத்தனையும் ஆசைப்படும்
ஆசைப்பட்டது கிடைக்கவில்லையெனில்
அவஸ்தைப்படும்
அழும் ஆர்ப்பாட்டம் செய்யும்
புகழ்ந்தால் புல்லரிக்கும்
சபாஷ் என்று சத்தமிடாமல் தட்டிக்கொள்ளும்
பரிகசித்தால் பயந்து போகும்
கோபப்படும்
குய்யோ முய்யோ என்று கத்தும்
கற்பனை செய்வதை நிஜமென்று நம்பும்
காணும் போது கனவையும் நம்பும்
மரண பயத்தில் மிரளும்
பாதுகாப்பின்மையில் பரிதவிக்கும்
ஆதரவுக்கு ஏங்கும்
அடைக்கலம் தேடும்
அடைக்கலம் தருபவையிடம் அடிமையாகி போகும்
இருப்பது போதும் என்று
ஒருபோதும் நினைக்காது
இன்னொன்று கேட்கும்
இன்னொன்று கிடைத்தால் இலவசமாய் கேட்கும்
திருடவும் செய்யும்
இரக்கப்படும்
நேர்மையை விரும்பும்
உதவி செய்யும்
காதல் வயப்படும்
சுயநலம் முளைக்கும்
சுயநலத்தில் இருந்தே சகலமும் முளைக்கும்
புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளும்
தத்துவ தர்க்கங்கள் செய்யும்
கருத்துக்களை வாரி வழங்கும்
ரகசியங்கள் நிரப்பிக் கொள்ளும்
ஒளிந்து கொள்ளும்
உள்ளத்தில் இருப்பதை ஒளித்தும் கொள்ளும்
உள்ளுக்கும் வெளியிற்க்கும் சுவர்கள் எழுப்பும்
நினைவுக் குப்பைகளை சேமித்துக் கொள்ளும்
குப்பைமேட்டில் அமர்ந்து கொண்டு
வாசனை திரவியங்கள் அடித்துக் கொள்ளும்
தனக்கு தானே கட்டளைகள் போட்டுக் கொள்ளும்
கட்டுப்பட்டு இருப்பதை
கௌரவமாக நினைக்கும்
பழையதை லேசில் விடாது
கடந்த காலத்திலேயே வாழும்
தேங்கி தேங்கி பாசி படியும்
மேலானவை - கீழானவை -
பிரித்துக் கொள்ளும்
சிலரிடம் சிரிக்கும்
சிலரை வஞ்சிக்கும்
சிலரை விரும்பும்
சிலரை வெறுக்கும்
ஒப்பிட்டுப் பார்த்து வெதும்பிச் சாகும்
பெண்களை மோகம் கொள்ளும்
ஒருவனுக்கு ஒருத்தி என்று சத்தியமாய் நினைக்காது

இன்ன பிற இன்ன பிற இன்ன பிற என
பித்துப் பிடித்து
பித்துப் பிடித்ததையும் அறியாத பித்தாய்
அறிவு வேஷம் கட்டி
ஆடும் வரை ஆடி
அழிந்தே போகும் அறிவீலி மனமே!

என்று -
என்னைப் பார்த்து நானே வசைமொழிய
கவிதை கேட்டால்
கவிதையும் கொடுக்கும்...

கடவுளின் கொ.ப.செ

அதன் பெயர் என்ன?
என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்


அது என்னிடம் இருக்கிறதா?
அது எல்லாரிடமும் இருக்கிறது

அது எங்கே இருக்கிறது?
அதற்குள் தான் நீ இருக்கிறாய்


அது இன்பமானதா? துன்பமானதா?
இரண்டும் இல்லாத இன்னொன்று


அதை நான் வெறுக்கிறேன்
அதனால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை


அதை நான் வணங்குகிறேன்
அதனால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை


அது அதிசயங்கள் செய்து காட்டுமா?
அதுவே ஒரு அதிசயம்தான்


அது ஏன் உருவமெடுத்து வந்து காட்சி தருவதில்லை?
அதுவே எல்லா உருவங்களுமாக இருப்பதால் தனியே காட்சி தருவது
சாத்தியமில்லாதது


அது எத்தனை வகைப்படுகிறது?
அது முழுமையானது


அதனை தொழுதால் வேண்டுவது கிடைக்குமா?
அதனால் உனக்கு எந்த பயனும் கிடைக்காது


அதற்கு பூஜைகள் செய்தால் குறைகள் நிவர்த்தியாகுமா?
அதனிடம் வியாபாரம் செய்ய முடியாது


அது எப்படிபட்டது?
அது அழகானது


அதை பார்க்க முடியுமா?
உணர முடியும்


அதை எப்படி உணருவது?
அதை நீதான் கண்டுபிடிக்க வேண்டும்


அதை கண்டுபிடிக்க முடியவில்லை
முயற்சி செய்...


அதை கண்டுபிடிக்க முடியாது
முயற்சி செய்...


அதை மதங்கள் வழியாக - கோட்பாடுகள் வழியாக - வழிபாட்டு முறைகள் வழியாக - சடங்குகள் வழியாக - பூஜைகள் வழியாக...
நிறுத்து - உணருவதற்கு வழிகள் என்பது இல்லை... உனக்கு அது கிடைக்காது


அப்படியானால் அதை உணருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
எதுவும் செய்யாதே


இன்னுமொரு சந்தேகம் -
அது எப்போது தெரியும்?
கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டால் அப்போது தெரியும்...